இத்தாலியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, குறைந்த ஊதியம் மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
ஊதிய உயர்வு, பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
