நாட்டில் எரிவாயு நுகர்வோருக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில், நாளாந்தம் 1,200 மெட்ரிக் டொன் லிட்ரோ எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாத்திரம் 41,000 மெட்ரிக் டொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிவாயு விநியோகத்தைத் தடையின்றித் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
