இலங்கையில் சர்வதேசப் பெண்களுக்கான சாகசப் போட்டியான Raid Amazones மீண்டும் நடைபெறவுள்ளது.
நவம்பர் 2ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை களுத்துறையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளனர்.
உடல் வலிமை, குழு ஒத்துழைப்பு மற்றும் சாகசத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு போட்டிகள் இதில் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வு இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்கும், நாட்டின் சாகசச் சுற்றுலாத் துறையை உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
