இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 191 ஓட்டங்களைப் பெற்றது.
192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் சீஃபர்ட் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 50 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பெற்றார். கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
எனினும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3–2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
