Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யானைகள் படுகொலைக்கு எதிராக இன்று காலிமுகத்திடலில் போராட்டம்!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் உயிரிழப்புகள் மற்றும் ‘கவன்திஸ்ஸ’ யானையின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, இன்று (3) கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் சசிந்து சஹான் தாரக இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரையில் உத்தியோகபூர்வமாக 208 யானைகள் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளதுடன், பதிவாகாத உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) சுமார் 15 வயதுடைய யானையொன்று சுட்டுக் கொல்லப்பட்டு, அதன் தந்தம் ஒன்று அறுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘மஹாசென’ என்ற யானை ஓராண்டுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் இதுவரை முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் அரசாங்கமும் வனவிலங்குத் திணைக்களமும் வெளியிட்ட தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், யானையின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், காயமடைந்த யானைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாமை, குப்பைகளை உட்கொண்டு யானைகள் உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் வனவிலங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகளை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானைகளைப் பாதுகாக்கத் தவறியதாகக் கூறப்படும் சுற்றாடல் அமைச்சரின் பதவி விலகல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பகிரங்க மன்னிப்பு மற்றும் கவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

6வது பாகிஸ்தான்-இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு!

ஜூலை 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெல் கொள்வனவு நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்!

ஜூலை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு பரணிலிருந்து 3 வயது குழந்தை மீது விழுந்த தந்தை – குழந்தை உயிரிழப்பு!

மே 17, 2026
இலங்கைவானிலை

இன்று இடியுடன் கூடிய மழை!

ஜூலை 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube