Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ருவன்வெலிசாய அபிவிருத்தித் திட்டம்: இந்தியாவுக்கு கம்மன்பில கோரிக்கை!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ருவன்வெலிசாய தூபிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அநுராதபுரம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அகழ்வுப் பணிகள் இடம்பெறக்கூடாது என்றும், இத்திட்டத்துக்கு இந்தியா பங்காளியாக இருக்கக்கூடாது என்றும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ருவன்வெலிசாய பௌத்தர்களின் புனித தலமாகவும், சிங்கள மக்களின் முக்கியமான அடையாளமாகவும் விளங்குவதாகத் தெரிவித்த அவர், அநுராதபுரம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தூபிக்கு அண்மையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த மதத்துக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், புனித அநுராதபுர நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படும் நிலையில், ருவன்வெலிசாயவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தன்னைத் தொடர்புபடுத்திப் பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகக் கூறிய கம்மன்பில, ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிகரெட் வரியால் ரூ.25 பில்லியன் இழப்பு!

ஜூலை 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பளையில் வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!

மே 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் மாபெரும் மோசடி! மக்களே உஷார்!

அக்டோபர் 17, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் பசுவின் பால் மூலம் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை உட்கொண்ட 450 பேருக்கு ரபிஸ் தடுப்பூசி!

அக்டோபர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube