ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்படாத கடல்வழிப் பாதையைப் பயன்படுத்தியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு நிலைமை ஏற்கனவே பதற்றமாக உள்ள நிலையில், இந்தத் தகவல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
எனினும், ஈரான் வெளியிட்டுள்ள இந்தக் கூற்றுகளை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
