சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சபாநாயகரைப் பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
