Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை

#முரசுபுயல் #மீனவர்களுக்குஎச்சரிக்கை #வங்காளவிரிகுடா #கடல்கொந்தளிப்பு #பலத்தகாற்று #வளிமண்டலவியல் #வானிலைஎச்சரிக்கை #இலங்கை #SriLanka #CycloneMurasu #BayOfBengal #WeatherAlert #FishermenWarning #StrongWinds #RoughSeas

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முரசு’ புயல் தற்போது இந்திய நிலப்பரப்புக்குள் பிரவேசித்துள்ளதுடன், தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்குத் திசையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் சாதாரண புயலாகவும், இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவிழக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என்பதால் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தப் புயல் தொடர்பில் வெளியிடப்பட்ட இறுதி எச்சரிக்கை அறிவித்தல் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 302 என்புகூடுகள் அகழ்வு!

ஜூன் 9, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதி!

ஜூலை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

ஜூன் 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஜோர்டானில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 7 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!

அக்டோபர் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube