Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழர் உரிமைக்கு இந்தியா இராஜதந்திர நடவடிக்கை!

#தமிழர்உரிமை #இலங்கைதமிழர்கள் #இந்தியா #இந்தியஇலங்கைஉறவு #எம்.பிசிறிநாத் #இராஜதந்திரநடவடிக்கை #அரசியல்தீர்வு #13ஆவதுதிருத்தம் #வடகிழக்கு #தமிழர்அரசியல் #SriLankaTamil #IndiaSriLanka #TamilRights #SriLankaNews

நவம்பர் 3, 2026
படிக்க 3 நிமிடங்கள்

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

தமிழினச் சுத்திகரிப்பு மற்றும் காஷ்மீரில் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு தொடர்பான ஒப்பீட்டு ஆய்வு மாநாட்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதான பேச்சாளராகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விஜயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க தமிழ் செயற்குழு அமைப்பின் செயலாளர் லவன் ஆகியோரும் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

இதன்போது தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு இளைஞர் அணி தலைவர் சூர்யா, அக்கட்சியின் தமிழ்நாட்டுக்கான செயலாளர் டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என இந்திய அரசியல் தலைவர்களிடம் எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு முயற்சிகளில் காணப்படும் இழுத்தடிப்புகள், காணிப் பிரச்சினைகள், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி, அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகத் தாம் கருதும் விடயம் தொடர்பிலும் தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, திருகோணமலையில் உள்ள சிவன் ஆலயத்திற்கு தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் அதன் ஆன்மீகத் தன்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவிதமான முன்னெடுப்புகளும் இடம்பெறவில்லை எனவும், இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள்கூட நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் இந்தியத் தரப்பிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை இந்திய நிதியமைச்சர் உன்னிப்பாகக் கேட்டறிந்துகொண்டதாகவும், இலங்கை அரசாங்கத்திடம் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக உறுதியளித்ததாகவும் சிறிநாத் தெரிவித்தார்.

மேலும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்துரைப்பதாகவும் இந்திய நிதியமைச்சர் உறுதியளித்ததாக அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அபிவிருத்தி மற்றும் கட்டுமானத் திட்டங்களை மீண்டும் முன்னெடுக்க இந்தியாவின் உதவியை கோரியதாகவும், அனுமதி கிடைக்காததால் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள திட்டங்கள் தொடர்பிலும் இந்தியத் தரப்பிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு இராஜதந்திர ரீதியில் நெருக்கடிகள் ஏற்படாத வகையில் அவர்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் என இந்திய நிதியமைச்சர் தெரிவித்ததாகவும் சிறிநாத் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தொடர்பிலும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வர விரும்பினால், அவர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும், இலங்கை திரும்ப விரும்பாத அகதிகளுக்கு இந்திய நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் எனவும் கோரியதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை’ – இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

ஜூலை 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அவுஸ்ரேலியாவில் நிலவும் கடுமையான வெப்பம் -உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினபுரி பாடசாலைகளுக்கு IT உபகரணங்கள் கையளிப்பு

ஜூன் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!

ஆகஸ்ட் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube