Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சூரிய சக்தித் துறையை முடக்குவதாகக் குற்றச்சாட்டு!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக எரிசக்தித் துறையில் உள்ள ஊழல் அதிகாரிகள் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி, எரிசக்தித் துறைசார் தொழிற்சங்கங்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளன.

இலங்கையில் சூரிய சக்தித் துறையைத் திட்டமிட்டு முடக்கும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும், இதனால் கூரை மீதான சூரிய சக்தி முறைமைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை அடைவதற்கும், 2050ஆம் ஆண்டளவில் பூச்சியக் கரிம உமிழ்வு நிலையை எட்டுவதற்கும் இலங்கை சர்வதேச ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், நிலக்கரி மற்றும் டீசல் கொள்வனவுகளுடன் தொடர்புடைய தரகுப் பணப் பரிவர்த்தனைகள் காரணமாக கூரை மீதான சூரிய சக்தி உற்பத்திக்கு எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், தரையில் நிறுவப்படும் சில சூரிய சக்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், கூரை மீதான சூரிய சக்தி முறைமைகளுக்கான ஊக்குவிப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகரக் கணக்கியல் மற்றும் நிகர மின் அளவீட்டு முறைகள் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர், 5 கிலோவோட் சூரிய சக்தி முறைமையினூடாக உற்பத்தி செய்யப்படும் 500 மின்அலகுகளுக்கு நுகர்வோருக்கு சுமார் 14,500 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதே அளவு மின்சாரத்தை மின்சார சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள சுமார் 47,900 ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, எரிசக்தித் துறையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, சூரிய சக்தித் துறையை மேம்படுத்தவும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மெக்சிகோவில் புயல் மற்றும் வெள்ளம்: ஐவர் உயிரிழப்பு

அக்டோபர் 13, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சாலமன் பாப்பையா காலமானார்

செப்டம்பர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கேரியாவில் ‘ரன் மல்லி’ கைது – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

அக்டோபர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டயகம ஈஸ்ட் வீதியைப் புனரமைக்கக் கோரி மக்கள் போராட்டம்!

அக்டோபர் 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube