ஐரோப்பிய வான்பரப்பில் பயணித்த பல விமானங்களுக்கு விடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து, இத்தாலியின் ரோம் நகரில் 7 விமானங்கள் தீவிர பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ரோமில் தரையிறக்கப்பட்ட இரண்டு ரயான்ஏர் (Ryanair) விமானங்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மிரட்டல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விமானங்களில் வெடிகுண்டுகள் உள்ளனவா என்பது தொடர்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
