ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானின் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் மோதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தேவைப்பட்டால் போருக்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உருவாகியுள்ளது.
