Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருணாகல் ரிதி விகாரையை சர்வதேச ஆன்மீக சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்!

#ரிதிவிகாரை #குருணாகல் #சுற்றுலாத்துறை #ஆன்மீகசுற்றுலா #பௌத்தமதம் #இலங்கையில்சுற்றுலா #SriLankaTourism #RidiViharaya #Kurunegala #SpiritualTourism #BuddhistTourism #TourismDevelopment

நவம்பர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்

குருணாகல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரிதி விகாரையை சர்வதேச பௌத்த மற்றும் ஆன்மீக நலவாழ்வு சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் மாதாந்தம் சுமார் 5,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், குறித்த விகாரையின் வரலாற்று மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

யோகா, தியானம் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகள்

சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் யோகா, தியானம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை கார்பன் வெளியேற்றமற்ற வலயமாகப் பேணுவதற்கான திட்டங்களும் ஆராயப்பட்டன.

இதற்கமைய, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத போக்குவரத்து சேவைகள், உணவகங்கள் மற்றும் ஏனைய சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ரிதி விகாரையை அண்மித்த ஏனைய சுற்றுலாத் தலங்களுக்கான வீதிக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

உள்ளூர் இளைஞர்களுக்கும் வாய்ப்பு

இந்தத் திட்டத்தில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வடமேல் மாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ரிதி விகாரையின் பிரதம விகாராதிபதி உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம், அரச உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஜூலை 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசியா -புளோரஸில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

ஆகஸ்ட் 17, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

நவம்பர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மே 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube