வனஜீவராசிகள் திணைக்களத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பத்தரமுல்லையில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள தலைமையகத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு இல்லை என தெரிவித்துள்ள வன அதிகாரிகள் சங்கம், நடைமுறைப்படுத்தப்படும் முறை நியாயமற்றது என குற்றம் சுமத்தியுள்ளது.
இதுதொடர்பில் கலந்துரையாடலுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளை இணைத்தல் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
