நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இன்று (04) நடைபெற்ற இப்போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், 70 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம், நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
185 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சீபெர்ட் 38 ஓட்டங்களையும், பிளேர் டிக்னர் 34 ஓட்டங்களையும், கிளென் பிலிப்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதற்கு முன்னர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
அதேவேளை, நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனை அனில் கும்ப்ளே வசம் உள்ளது. அவர் 1994ஆம் ஆண்டு வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
