Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

நகரும் பேருந்திலிருந்து தள்ளப்பட்ட பெண் நடத்துநர் உயிரிழப்பு!

நவம்பர் 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், பயணி ஒருவருடன் ஏற்பட்ட பயணச்சீட்டுப் பணம் தொடர்பான வாக்குவாதத்தின்போது நகரும் பேருந்திலிருந்து கீழே தள்ளப்பட்ட 24 வயதுடைய பெண் நடத்துநர், 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மணுகுரு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணியாற்றிய குண்ட்லா பிரவளிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி மணுகுருவிலிருந்து பத்ராசலம் நோக்கிப் பயணித்த பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தின் அஸ்வாபுரம் மண்டலத்திலுள்ள மிட்டகுடெம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, பயணி ஒருவர் தனது மகனுக்கான பயணச்சீட்டைப் பெறுவதற்காக 100 ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். அதற்கான 10 ரூபாய் பயணச்சீட்டை வழங்கிய நடத்துநர், மீதமுள்ள 90 ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் பின்னர் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பயணி தனது இறங்கும் இடம் நெருங்கியபோது மீதிப் பணத்தைக் கோரியதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, பனோத் மௌனிகா என்ற பெண் பயணி, நகரும் பேருந்தின் கதவு வழியாகப் பிரவளிகாவை கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இதில் வீதியில் விழுந்த நடத்துநரின் கால்கள் மீது பேருந்தின் பின்புறச் சக்கரங்கள் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார். முதலில் பத்ராசலம் வைத்தியசாலையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹைதராபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட அவர், 10 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அஸ்வாபுரம் பொலிஸார், சந்தேகநபரான மௌனிகாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்திற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என தெலங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அவரது தாயாருக்கு அரசுப் பணி வழங்கவும், குடும்பத்திற்கு இந்திரம்மா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கவும், அரசாங்கம் மற்றும் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதன் அடையாளமாக முன்னாள் கம்மம் மாவட்டத்தில் புதன்கிழமை பேருந்து சேவைகளை நிறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பேஸ்புகில் AIனால் உருவாக்கப்பட்ட போலி கணக்குகள் – மோசடி மற்றும் ஆபாச உரையாடல்களில் சிக்க வைக்கும் முயற்சி!

ஜூலை 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றினை நகர்த்த முற்பட்ட போது விபத்து

அக்டோபர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

மொரிஷியஸை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இலங்கை!

அக்டோபர் 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் – எதிர்வரும் செப்டம்பர் 15

ஜூன் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube