இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் கட்டணங்கள் அதிகபட்சமாக 9 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட வஜ்ரா பேருந்துகளின் அதிகபட்ச கட்டணம் 75 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட செலவுகளைக் கருத்திற்கொண்டு போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையைப் பாதுகாப்பதற்காகவே இந்தக் கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
