Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆரையம்பதியில் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைப்பு – பெண் உயிரிழப்பு!

நவம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரையம்பதி, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை சுமார் 4 மணியளவில் குறித்த பெண் தனது வீட்டின் முன்பகுதியில் கதிரையில் அமர்ந்திருந்தபோது, வீட்டின் பின்புறமாக வந்த அவரது உறவினரான ஆண் ஒருவர், அவர் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தீப்பற்றியதில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், மறுநாள் புதன்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரியின் கணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், வியாழக்கிழமை (05) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்: கனகராஜா சரவணன்

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

செப்டம்பர் 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

முதியோர் பராமரிப்புக்கு ரோபோ

ஜூன் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: சுமந்திரன் வாதம்! விசாரணை செப்டம்பர் 7ஆம் திகதி

ஜூலை 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தந்தையை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 16 வயது மகன்

செப்டம்பர் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube