Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!

சித்திரை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார்.

அவர் தேசிய திட்டமிடல், அரச நிதி முகாமைத்துவம், பேரண்டப் பொருளாதார முன்கணிப்பு, அபிவிருத்தி நிதியளிப்பு, நிதிப் பகுப்பாய்வு, வரிக் கொள்கை மற்றும் உயர்கல்வி திட்டமிடல் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவமிக்க அதிகாரியாவார்.

அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரிவின் பிரதானியாகப் பணியாற்றி, பொருளாதார நிர்வாகம் மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பாக மூலோபாயக் கொள்கை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் பதிவாகும் குற்றச் சம்பவங்களில் 40 சதவீதமானவை மேல்மாகாணத்தில் பதிவு

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“வெசாக் வாரத்தில்” பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் குறித்து சுற்றுநிருபம்!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கு ஒத்திவைப்பு!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லங்கா சதோசாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube