நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் மக்களின் குடிநீருக்காக பயன்படும் முக்கிய ஆதாரமான பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதன் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (15) அதன் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அத்தனகல ஓயா ஆற்றின் இரு மருங்கிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
