Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த கூறி ஜனாதிபதி கோரிக்கை!

வைகாசி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளமையினால் எமது பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஏப்ரலில் 29 சதவீதம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.

அதேபோல் இலங்கையர்களால் வௌிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணமும் குறைவடைந்துள்ளது.

வருமான வழியாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி  மற்றும் டொலரின் பற்றாக்குறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

அதேநேரம், ரூபாவின் இந்த வீழ்ச்சி காரணமாக எரிபொருளுக்கான ஒதுக்கமும் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக கடந்த பெப்ரவரி மாதம் 98 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு ,
மார்ச் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் 216 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. ஏப்ரலில் 368 மில்லியன் அமெரிக்க டொலராகவும், கடந்த மே மாதத்தில் 522 மில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்தது.

எனவே மாதம் ஒன்றுக்கான எரிபொருள் இறக்குமதி செலவினம் 500 மில்லியன் அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளது. இது எமது ரூபாவின் வீழ்ச்சியையும் டொலருக்கான கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் மீளாய்வை முன்னெடுத்து வருகின்றோம். இதில் அரசாங்கமும் தற்போது யோசனை அதற்கு முன்வைத்துள்ளது.
இதனால் குறுகிய காலத்திற்கு எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்த வேண்டும்

இறக்குமதி செலவினத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

டொலர் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க சகல பிரஜைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெற்பயிர்ச் செய்கைக்கான உரமானியம்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடிவிவகாரத்தில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் உயிரிழப்பு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

19 கோடி ரூபாய் பெறுமதியான போலி டொலர்களுடன் பெண்ணொருவர் கைது!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube