Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

Cockroach Janata Party-க்கு இந்தியாவில் தடை! – எப்படி ஆரம்பித்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி?

வைகாசி 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த், இளைஞர்களைப் பற்றி விமர்சித்ததைத் தொடர்ந்து இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (cockroach janata party). தொடங்கப்பட்ட 6 நாட்களிலேயே ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களை தன் பக்கம் இழுத்தது, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.

இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (cockroach janata party) இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) என சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று இயங்கிவந்தது. இந்நிலையில், இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (cockroach janata party)யின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

 

“கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை. இத்தொழில் துறையிலும் இவர்களுக்கு எவ்வித இடமும் இல்லை. இவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களாகவும், சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலர்களாகவும், மற்றும் சிலர் பிற செயற்பாட்டாளர்களாகவும் மாறி, அனைவர் மீதும் தாக்குதல் தொடுக்கத் தொடங்குகின்றனர்” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த 15ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணையில் தெரிவித்தார்.

இந்நிலையில், அபிஜித் தீப்கே (30) எனும் இளைஞர் இதற்கு எதிர்வினையாக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (cockroach janata party) எனும் இணைய இயக்கத்தைத் தொடங்கினார். இதற்கான பிரத்யேக இணையதளமும், தனியாக எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு, இன்ஸ்டாகிராம் கணக்கு ஆகியவற்றைத் தொடங்கினார்.

இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இணைய இயக்கம் தொடங்கப்பட்ட ஆறு நாட்களில் 15.5 மில்லியன் பின்தொடர்பாளர்களைப் பெற்றுள்ளது. அதே நேரம் இந்தியாவில் தொடர்ந்து மூன்று முறை மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவுக்கு இன்ஸ்டாகிராமில் வெறும் 8.8 மில்லியன் பின்தொடர்பாளர்கள் மட்டுமே உள்ளனர் எனவும் பரவலாக பேசப்பட்டுவந்தது. இதேபோல், எக்ஸ் பக்கத்திலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டா பக்கத்தில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி வந்தது. இந்நிலையில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (cockroach janata party)யின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டு, கணக்கும் நீக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (cockroach janata party) நிறுவன தலைவர் அபிஜித் தீப்கே cockroach is back எனும் புதிய எக்ஸ் கணக்கைத் தொடங்கியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமா

கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தேகநபர் வழங்கிய தகவலில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மாணவிகள்!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube