2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
இப்போட்டியில் பெங்களூரு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய விராட் கோலி, வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 60 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.இதன் மூலம் இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் 211 ஆவது தடவையாக 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் பெறப்பட்ட விக்கெட் ஜோடிப் பகிர்வில் பங்கெடுத்த வீரர் என்ற உலக சாதனையை கோலி படைத்துள்ளார்.
முன்னர் 210 தடவைகளுடன் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
