Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அநுராதபுரம் – நாச்சதுவ பகுதியை பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய திட்டம்!

வைகாசி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் பெரிய வெங்காய விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், விசேட விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அநுராதபுரம் – நாச்சதூவ விவசாயக் குடியேற்றப் பகுதியை, பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.

நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவைப்பாடானது 03 இலட்சத்து 25,000 மெற்றிக் டொன்னாக காணப்படும் போதிலும், உள்நாட்டில் தற்போது 50,000 மெற்றிக் டொன் வெங்காயமே உற்பத்தி செய்யப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், நடப்பு வருடத்திற்குள் உள்நாட்டு வெங்காய உற்பத்தியை 70,000 மெற்றிக் டொன் வரை அதிகரிப்பதே இந்த விசேட திட்டத்தின் பிரதான இலக்காகும் என விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டிலேயே தரமான பெரிய வெங்காய விதைகளை உற்பத்தி செய்வதன் மூலம், விதைகளை இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளுக்குச் செலுத்தப்படும் பெருமளவிலான செலவீனங்களைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசேட திட்டத்தின் அங்குரார்ப்பண உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை திங்கட்கிழமை (25) நடைபெறவுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் தெரிவு அணிக்கு எதிராக இலங்கை ஆதிக்கம்!

ஆனி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச வழக்கில் கைது!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்பிட்டியில் அதிர்சி : 2 ½ வயது மகளை கிணற்றில் வீசிய தாய் கைது!

ஆனி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

துருக்கியில் அறுவை சிகிச்சை பிரசவங்களை மேற்கொண்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிநீக்கம்!

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube