Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் 226 பேரை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்!

வைகாசி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிவப்பு அறிவித்தல் மூலம் 35 சந்தேகநபர்களும், ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 33 பேரும், மேலும் சுமார் 68 முதல் 70 வரையிலான சந்தேகநபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தற்போது வரை குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக சுமார் 226 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த 226 பேரில் சுமார் 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் டுபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பதுங்கியிருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் – பரவிபாஞ்சான் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கள்ளச்சாராய உற்பத்தி பகுதி பொலிஸாரால் முற்றுகை!

வைகாசி 3, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா தனியார் தாதியர் கல்லூரி சர்ச்சை: 5 பேர் கைது

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube