எதிர்வரும் மே 26 முதல் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என்பதால், அந்த நாட்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக அதிகரித்திருந்த பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வந்தமையினால், கடந்த நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை பெய்திருந்தது. சில பகுதிகளில் 200 முதல் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததால், பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. எனினும், நேற்று (23) பலத்த மழை பெய்யாததால் ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது.
இதன்படி, களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
