Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெப் ரக வாகனம் மோதி யானை பலி!

வைகாசி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மரதன்கடவல தோணிகல பகுதியில் கெப் வாகனம் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், கெப்வண்டிக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

மரதன்கடவல பொலிஸ் பிரிவின் தோணிகல பகுதியில் திங்கட்கிழமை (25) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கண்டியிலிருந்து வடபகுதிக்கு சென்ற கெப் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், வவுனியா புளியங்குளம் மற்றும் பள்ளி வீதி உடுவில் பகுதியை வசிப்பிடமாக கொண்ட 24 வயதுடைய கெப்வண்டியின் சாரதியும் இன்னுமொரு இளைஞனும் வாகனத்தில் பயணித்துள்ளனர். எனினும் அவர்களுக்கு எந்த ஆபத்துக்களும் இல்லையென்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கெக்கிராவ, கனேவல்பொள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கெக்கிராவ நீதிமன்றத்தில் விடயங்களை தெரிவித்ததன் பின்னர் யானையின் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்

விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும உதவித் தொகையில் மோசடி

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“வாரீ மஹீம அபே உரிம” 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube