Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

வைகாசி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி 14 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை சான்றுப் பொருட்களோடு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இந்த வழக்கானது ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலும், பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் (27) கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. கருணாகரன் முன்னிலையில் இவ்வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளிக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனையும் அத்துடன் முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறும், அது தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் இரண்டாம் குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வைகாசி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கணவரின் தொடர்ச்சியான கொடுமையால் விரக்தி; மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த மூன்று பிள்ளைகளின் தாய்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பௌர்ணமி தின தானசாலைகளைப் பதிவு செய்யும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube