Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகளுக்கு நீதிகோரி மன்னாரில் போராட்டம்!

வைகாசி 29, 2026
படிக்க 2 நிமிடங்கள்

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமயத் தலைவர்களால் இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி வெள்ளிக்கிழமை (29) மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.மகாலட்சுமி தலைமையில் பெற்ற குறித்த கண்டனப் பேரணியில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதோடு, புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் யுகைதியா முகைதீனும் கலந்துகொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

“சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”, “பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்”, “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பக்கசார்பற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, “பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்”, “சட்டமும் நீதி முறையும் சமமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும்” என்ற வாசகங்கள் குறித்த பதாதைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவட்டச் செயலகத்துக்கு முன் ஆரம்பமான ஊர்வலம் மன்னார் பஜார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலக பகுதியை சென்றடைந்தது.

இதன்போது அவர்கள் பகிரங்க கோரிக்கையை முன்வைத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை பொதுவெளியில் வாசித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் த.வெ.க தலைவர் கவனம் செலுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை அதிகரிப்பை மேற்கொள்கின்றன – ரஞ்சித் விதானகே!

வைகாசி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

த.வெ.க ஆட்சியமைக்க தடையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி ஆளுநருக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் நிலைய ஊழியர் கைது

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube