Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைச்சர் விஜித்த ஹேரத் நியூஸிலாந்தின் அமைச்சர் டாட் மெக்லேவுடன் சந்திப்பு!

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் நியூஸிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுன் 3 ஆம் திகதி வரை நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கிறார்.

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை (26) நியூஸிலாந்தை சென்றடைந்த அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு உயர்மட்டப் பிரதிநிதிகள் பலருடனும் சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய நியூஸிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் உட்பட பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து நியூஸிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான இராஜாங்க அமைச்சர் நிக்கோலா கிரிக்கை சந்தித்த விஜித்த ஹேரத், வர்த்தக ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் உலகப் பொருளாதாரம் என்பன உள்ளடங்கலாக இருநாடுகளினதும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்தோடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து அந்நாட்டு அமைச்சருக்கு விளக்கமளித்ததுடன், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நியூஸிலாந்து வர்த்தகர்களுக்கு அழைப்புவிடுத்தார்.Beaches & Islands

அதேபோன்று இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், தொழிற்பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் கல்வித்துறைசார் வாய்ப்புக்கள் தொடர்பில் நியூஸிலாந்தின் உயர்கல்வி அமைச்சர் பென்னி சிம்மண்ட்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தில் அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பம்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

ஆவணி 3, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

போலி ஆவணங்களுடன் வாக்காளர் அட்டை பெற்ற இலங்கைத் தம்பதியினர் கைது!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் UNESCO மற்றும் World Vision இணைந்து சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டும் செயற்திட்டம்

புரட்டாதி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube