Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

25 சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்ய 581 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

Cabinet ,‘Mithuru Purawara

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கத்தின் ‘மிதுரு புரவர’ (Mithuru Purawara) திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 25 நகரங்களில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் மதிப்பிடப்பட்ட 581 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்ளூர் சமூகங்களின் வசதிகள் மற்றும் நல்வாழ்வுக்காக சிறிய நகரங்களை மேம்படுத்தும் நோக்குடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) கீழ் இந்த வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு முன்னுரிமை அபிவிருத்தித் திட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்தத் திட்டங்களை 2026 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திக்காக 25 நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 23 நகரங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் ஊடாக நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கே இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்நினோ காலநிலையில் அதிகம் ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

புரட்டாதி 1, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச சுற்றுலா விசா!

வைகாசி 25, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AI மனிதர்களின் புத்தி கூர்மையையும் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கச் செய்கிறது!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube