Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு!

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் பொது இறுதிச்சடங்கு நடத்த ஈரான் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து தெஹ்ரான் துணை முதல்வர் முகமது அமீன் தவகோலிசாதே தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறும்.

தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கமேனியின் இறுதி விருப்பத்தின்படியும் அவரது உறவினர்களின் ஆலோசனையின்படியும், மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத் தலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஈரானை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் வழிநடத்திய 86 வயதான ஆயதுல்லா அலி கமேனி, கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக, மார்ச் 4ஆம் திகதியன்று நடத்தவிருந்த இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது போர்ச் சூழல் தணிந்துள்ள நிலையில், இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூன் மாத நடுப்பகுதியில் இஸ்லாமிய நாட்காட்டியின் முஹர்ரம் மாத தொடக்கத்தில் நடத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிதி மோசடி ! காவல்துறை எச்சரிக்கை !

வைகாசி 24, 2026
உலகம்

டொயோட்டா வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube