ஹொலிவுட் சினிமாவின் பிரபல மாபெரும் நடிகரான ஜேம்ஸ் ஹேண்டி (James Handy) மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், உயிரிழந்த நடிகரின் காதலியின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கொலைக்கான காரணம் மற்றும் இச்சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழக்கும் போது 81 வயதாக இருந்த ஜேம்ஸ் ஹேண்டி, ‘Jumanji’, ‘Top Gun: Maverick’ மற்றும் ‘Logan’ போன்ற உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் அன்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
