Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடகர் சங்கீர்த்தனின் விடுதலையை வலியுறுத்தி இன்று போராட்டம்!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரச பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று சனி்க்கிழமை (6) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய எழுச்சிமிக்க வரிகளைக்கொண்ட பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகரான சங்கீர்த்தனன் (24) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

“பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும்” எனத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய மக்கள் சக்தி அரசு வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரச பயங்கரவாதத்தினால், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட கலைஞனை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (6) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்’ எனும் கோரிக்கையோடு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி, பழைய கச்சேரிக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ராகளை – புரூக்சைட் தேயிலை தொழிற்சாலையில் தீவிபத்து!

வைகாசி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

19 கைதுப்பாக்கிகளுடன் 4 பேர் கைது!

ஆனி 3, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube