Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 24 ஆண்டு கடுழியச் சிறைத் தண்டனை!

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வறுமை காரணமாக தனது மகனுக்கு சிறந்த கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெற்றோரால் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் ஒப்படைக்கப்பட்ட 10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விகாராதிபதிக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதனையடுத்து, குற்றவாளியான பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால், மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகியுள்ளதால், அவர் ஆஜராகாத நிலையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு தீவிபத்தில் பலியான குழந்தைகள் – தந்தையை பிணையில் எடுக்க முன்வராத குடும்பம் !

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பல்லேகம ஹேமரத்தின தேரரின் விளக்கமறியல் நீட்டிப்பு!

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீதுவை ஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube