Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராணுவ சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்ற நபர் கைது!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இராணுவ சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று, காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரங்கஸ்பிட்டிய – கிரிந்திவெல பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த 2018 செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். இது குறித்து பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று திங்கட்கிழமை 08 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்பொகுணுகம பகுதியில் வைத்து இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ரண்பொகுணுகம, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கி – 01, அதற்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் – 05, ரி-56 ரக தோட்டாக்கள் – 04, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் – 08, 12 போரா ரக தோட்டாக்கள் – 02 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீர!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி வாகனங்களின் விலை 10% உயர்வடையும் வாய்ப்பு!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube