Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த சாசன சீரழிவைத் தடுக்க தேவாலயங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் அவசியம்!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பௌத்த சாசனத்திற்கு ஏற்பட்டுவரும் சீரழிவைத் தடுப்பதற்காக விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தங்களை கொண்டு வருமாறு மல்வத்தை பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல மல்வத்தை மகா விகாரைக்குச் சென்றிருந்த போதே மகாநாயக்கத் தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படவுள்ள பௌத்த துறவிகள் தொடர்பான மகாசங்க மாநாடு குறித்து மகாநாயக்க தேரருக்கு தெளிவுபடுத்துவதற்காக, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கு சென்றிருந்தார். அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மகாநாயக்கத் தேரர் மேலும் தெரிவிக்கையில்,

மகா சங்கத்தினர் தொடர்பாக பௌத்த ஒழுக்கக்கோவை ஒன்றைக் கொண்டுவருவதற்காக 2006 ஆம் ஆண்டு முதல் தான் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்ததாகவும் ஆனால் அதற்கான ஆதரவு கிடைக்காத காரணத்தால் அதனை தான் கைவிட்டதாக குறிப்பிட்டார்.

பௌத்த துறவிகள் ஒழுக்கக்கோவை ஒன்றை தயாரிப்பதற்காக மல்வத்து மகாநாயக்கரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பௌத்த பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மகா சங்கத்தினர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், அந்த முயற்சியை வெற்றிகொள்ள முடியாமல் போனதாகவும், அதன் விளைவுகளையே தற்போது காணக் கூடியதாக உள்ளதாகவும் மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல, மகா சங்கத்தினரால் பிரதான எதிர்க்கட்சியிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் சங்க மாநாடொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிவிப்பதற்காக சஜித் பிரேமதாச எதிர்வரும் நாட்களில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி அதற்கான பொருத்தமான திகதியையும் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும 2ம் கட்டத்திற்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2.5 மில்லியன் மோசடி தொடர்பில் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும அரசாங்க நிதி குழுவில் முன்னிலை!

சித்திரை 30, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஆடி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

முதியோர் பராமரிப்புக்கு ரோபோ

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube