அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை மேலும் தீவிரப்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் சீனா வலியுறுத்தியுள்ளது.
நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை இராணுவ நடவடிக்கைகளால் தீர்க்க முடியாது என்று பீஜிங் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்று மாதங்களாகத் தொடரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலால் வளைகுடா மற்றும் பரந்த மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஈரான்-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், யாரும் இராணுவ மோதலை மீண்டும் தூண்டக்கூடாது.
பிராந்திய நாடுகளின் இறைமை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் மற்றும் நிலைநாட்டப்பட வேண்டும்.
