Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

 இலங்கையின் காலநிலையை பாதிக்கவுள்ள எல் நினோ – விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு அடுத்த மாதம் முதல் இலங்கையின் வானிலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவு பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூறுகையில், இந்த நிகழ்வு தென்மேற்கு பருவமழை மீதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்கனவே எல் நினோ நிலைமைகள் உருவாகியுள்ளதுடன், அதன் விளைவுகள் சுமார் 11 மாதங்கள் வரை பல்வேறு அளவுகளில் நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எல் நினோ காரணமாக இலங்கையின் காலநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில், நீர்ப்பாசனம், மகாவலி அதிகாரசபை, அனர்த்த முகாமைத்துவம், விவசாயம், கமநல அபிவிருத்தி மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட 20 முக்கிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

புரட்டாதி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர் தவறிவீழ்ந்து பலி!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு ஜூலை 15

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube