Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மூவரிடம் விசாரணைக்கு CIDக்கு அனுமதி!

#உயிர்த்தஞாயிறுதாக்குதல் #CID #குற்றப்புலனாய்வுத்திணைக்களம் #இலங்கைசெய்திகள் #விசாரணை #நீதிவிசாரணை #உயிர்த்தஞாயிறு #தமிழ்ச்செய்திகள் #இலங்கைஅரசியல் #முக்கியசெய்தி #SriLankaNews #EasterSundayAttacks #CIDInvestigation #BreakingNews #LatestNews

அக்டோபர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட மூவர், உண்மையான குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக இருப்பதாகத் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

குறித்த மூவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், புதன்கிழமை (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தாங்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்ற போதிலும், உண்மையில் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் சுதந்திரமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துகள் பாரதூரமானவை எனச் சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மில்ஹான், ரிஸ்கான் மற்றும் ஸைனுல் அப்தீன் ஆகிய மூவரிடமும் சிறைக்குச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு CID அதிகாரிகள் எட்டுப் பேருக்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முன்னர் மந்தகதியில் இடம்பெற்ற விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த வாரம் பல முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கிய மைக்கல் சேவியர் வில்வராசிங்கம் என்ற ராஜன் என்பவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிமடை- டயரபா பகுதி தொழிலாளர் ஒருவர் தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டார்!

மே 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதியில் புதிய மாற்றங்கள்

செப்டம்பர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

75 அடி பள்ளத்தில் வீட்டின் கூரைமீது கவிழ்த்து விபத்துக்குள்ளான லொரி – நால்வர் படுகாயம்

செப்டம்பர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதி உயிரிழப்பு!

மே 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube