Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் தனது வான்பரப்பு மற்றும் விமான நிலையங்களை மூடியது!

ஆனி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் தனது வான்பரப்பை அவசரமாக மூடியுள்ளது.

மேலும் குவைத்திற்கு வரவிருந்த அனைத்து விமானங்களையும் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று (11) செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்றையதினம் அதிகாலை 4:50 மணி முதல் இந்த வான்பரப்பு மூடல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, குவைத் வான்பரப்பிற்குள் நுழைந்த பல ஏவுகணைகளை தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக குவைத்தின் உத்தியோகபூர்வ செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று (11) அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ விமானத் தளங்களை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

குவைத்தில் உள்ள ‘அலி அல் சலேம்’ மற்றும் ‘அஹ்மத் அல் ஜாபர்’ ஆகிய இரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளங்கள் உட்பட 18 முக்கிய அமெரிக்க இராணுவ இலக்குகளை இருகட்டங்களாகத் தாக்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அண்மையில் தென் ஈரானில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை இது என ஈரான் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தற்போது குவைத், பஹ்ரைன் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போர்ச் சூழல் உருவாகியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து தெற்கு அஞ்சுவது ஏன்?- ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கேள்வி

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் சேவையை அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏற்றுமதிக்கு பாதிப்பு? இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஆனி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ குடியரசில் வேகமாக பரவிவரும் எபோலா வைரஸ்!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube