உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் 2026 பதிப்பு மெக்சிகோ நகரில் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து இம்முறை போட்டிகளை நடத்துகின்றன.
இதுவரை நடைபெற்ற உலக கிண்ணத் தொடர்களில் மிகப் பெரிய தொடராக இது கருதப்படுகிறது. இம்முறை 48 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
தொடரின் ஆரம்பப் போட்டியில் மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகும்.
உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
