Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் மானியத்தை தொடர்ந்து வழங்குவது கடினம்!

ஆனி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழு முன்னிலையில் முன்னிலையாகிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ த சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிகாரிகள், எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அதற்கமையவே எரிபொருள் விலைகளை அதிகரிப்பது போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த மே 13ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

அங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் விலை 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. எனினும், அரசாங்கம் ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கி, அதனை 392 ரூபாய்க்கு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைந்து வருவதுடன், இதனை நீண்ட காலத்திற்கு தொடர முடியாது என்றார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சல் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளது!

ஆடி 21, 2026
இலங்கை

ஊடக வல்லுநர் நிறுவனம் உருவாக்க சட்டமூலம் வெளியீடு!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்பு தீர்மானம் 139 வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றம்

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube