அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்துருகிரிய – கொடகம வீதியின் பனாகொட பகுதியில், பாதையைக் கடக்க முயன்ற நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (13) காலை அத்துருகிரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து காயமடைந்த சாரதி, சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
