திருகோணமலை வெருகல் மண்ணைச் சேர்ந்த கானக்குயில் என அழைக்கப்படும் வர்ஜா, தமிழ்நாட்டின் பிரபல தொலைக்காட்சியான Zee தமிழின் பிரம்மாண்ட இசைப் போட்டியின் இறுதி சுற்றில் (Grand Finale) தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பல கடினமான சுற்றுகளை வெற்றிகரமாக கடந்து, தனது இனிமையான குரலால் தமது மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள வர்ஜா, இன்று யாழ்ப்பாண விமான நிலையம் வழியாக நாட்டை வந்தடைந்தார்.

அவரது வருகையை முன்னிட்டு யாழ்ப்பாண விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.
