Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 மீற்றர் வரை உயர்ந்த கடல் படுகை!

ஆனி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டானாவோ தீவில் ஜூன் 8 ஆம் திகதி ஏற்பற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் (6.5 அடி) வரை மேலே உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுற்றாடல் துறை இன்று (14) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விசித்திரமான புவியியல் மாற்றத்தினால் பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் வான்வெளிக்கு வெளிப்பட்டு, பெருமளவிலான கடல் உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மிண்டானாவோ தீவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 61 பேர் பலியாகியுள்ளனர் என்பதுடன், மேலும் 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ முகவரகம் குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களின் பின்னரே, கடலோரப் பகுதிகள் திடீரென மேலெழும்பி நிலமாக மாறியுள்ள புவியியல் விந்தையை நடைபெற்றுள்ளது. சில பகுதிகளில் கடலோரக் கரைக்கோடு சுமார் 200 மீற்றர் வரை கடலுக்குள் விரிவடைந்துள்ளது.

“தெற்கு மிண்டானாவோ கடற்கரையிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ‘கொட்டபாட்டோ அகழி’ பகுதியில் ஏற்பட்ட நிலத்தட்டு நகர்வு காரணமாக, சரங்கனி மற்றும் டவாவோ ஆக்ஸிடென்டல் ஆகிய மாகாணங்களின் கடற்கரைப் பகுதிகள் மேல்நோக்கித் தள்ளப்பட்டுள்ளன.

சுற்றாடல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில், கடலுக்குள் இருக்க வேண்டிய பிரம்மாண்ட பவளப்பாறைகள் மற்றும் கடல்புல் படுக்கைகள் முற்றிலும் வறண்டு போய், தரைமட்டத்தில் காட்சியளிக்கின்றன.

பவளப்பாறைகள் காற்றில் வெளிப்பட்டதால், அவற்றுடன் இணைந்து வாழும் சிறிய பாறை மீன்கள், கடல் விலாங்கு மீன்கள், சிப்பிகள் மற்றும் நத்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கைக்குண்டு மற்றும் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் நேற்று கையொப்பமிட்டார்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube