Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் பொது வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல்!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிலாபம் பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரைப் பார்ப்பதற்காக, மதுபோதையில் இருந்த மூவர் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர். அவர்கள் வைத்தியசாலைக்குள்  அத்துமீறி நுழைய முயன்ற போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்தே இருவரும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துச் சிலாபம் தலைமையகப் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலை களஞ்சிய பகுதியில் பாரிய தீ விபத்து!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திடீர் தங்க விலை ஏற்றம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் மின்சார சேமிப்புத்திட்டம் முதன்முறையாக!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் மீளாய்வு மனுவை விசாரணைக்கு ஏற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube