Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய கூட்டு இராணுவ நடவடிக்கை, தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் மூலம் இன்று ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் இரு தரப்பினரும் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர் என பாக்கிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும் இந்த ஒப்பந்தம் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் எனவும் உலகளாவிய வர்த்தகத்தைப் பாதுகாக்கும் என இந்தியா நம்புவதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி, பல நாடுகளில் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுத்த மேற்கு ஆசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வை வரவேற்கிறேன்.

இந்தப் புரிந்துணர்வைச் செயல்படுத்துவது, பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல் மற்றும் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது.

எஞ்சியிருக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்து ஒரு நீடித்த இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் புதிய POS கட்டண முறைமை!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதம நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு – உதய கம்மன்பில

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube