Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ரத்மலானை பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

ஆனி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு – ரத்மலானை பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மொரட்டுமுல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிற்கு நேற்று (17) கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரத்மலானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் மொரட்டுவ மற்றும் பிலியந்தலை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட ஒரு கைத்தொலைபேசி, 25 செப்புக் குழாய்கள் மற்றும் தங்க வளையலை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு – ஏறாவூரில் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு !

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube